அசுரனை பார்த்துவிட்டு சிம்புவை திட்டிய தயாரிப்பாளர்.. திறமை இருந்தும் வீட்டிற்குள் அடைந்து கிடப்பது ஏன்?..
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் வெளியாகி வரவேற்பை பெற்றதுடன் சினிமாத்துறையினர்..
அரசியல்வாதிகள் போன்றவர்களும் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அசுரன் படத்தை பார்த்து சிம்பு மீது தான் கோபம் வந்தது என்று கூறியுள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிப்பதாக இருந்தது. ஆனால் அப்படம் ஷூட்டிங் தொடங்காமலே டிராப் ஆனது.
அசுரன் படம் பார்த்துவிட்டு சுரேஷ்காமாட்சி கூறும்போது,'அசுரன் படம் பார்த்தேன். தனுஷின் அர்ப்பணிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது. எனக்கு சிம்பு மேல் கோபம்தான் வருகிறது. திறமை இருந்தும் அவர் வீட்டிற்குள் அடைந்து கிடப்பதை பார்த்து கோபம்வருகிறது” என்றார்.
சிம்புவின் ரசிகர்களும் விரைவில் அதிரடி படம் ஒன்றை சிம்பு தரவேண்டும் என்று நெட்டில் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். சிம்புவின் மீதுள்ள அக்கறையாலேயே சுரேஷ் காமாட்சி இப்படி கருத்து தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.