தளபதிக்கு ஆட்டோ ஓட்டிய விஜய் ரசிகர்.. தேவதர்ஷினி வெளியிட்ட பிகில் சீக்ரெட்...
தளபதி விஜய்யின் பிகில் தீபாவளியையொட்டி 25ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை பற்றிய சுவராஸ்ய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதில் விஜய்க்கு அக்காவாக தேவதர்ஷினி நடித்திருக்கிறார். அவர் தனது அனுபவத்தை கூறினார்.
பிகில் படத்தில் என் மகள் நடிப்பதாக இருந்தது அந்த நேரத்தில் அவருக்கு பள்ளி தேர்வு வந்துவிட்டதால் நடிக்கவில்லை. ஆனால் தளபதிக்கு அக்காவாக நடிக்க என்னை அட்லி அழைத்தார்.
அக்காவாகிய நானும், தம்பியான விஜய்யும் ஆட்டோவில் போகும் சீன் படமானது. ஒரு ஆட்டோவில் என்னை ஏறி உட்காரச் சொன்னார்கள். அந்த ஆட்டோ டிரைவருக்கு எந்தப் படத்தோட படப்பிடிப்புன்னு தெரியவில்லை. அவர் என்னிடம், அக்கா உங்களுடன் வரப்போகிறவர் யார்?என்றார். அவரது கேள்விக்கு பதில் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தபடி உங்களுக்கு எந்த ஹீரோவை பிடிக்கும்' ஒரு பேச்சுக்குக் கேட்டேன். உடனே 'நான் தளபதி ஆளுக்கா ' என்றார். அவரது ஆர்வத்தை கண்டதும் நானும் அவசரப்பட்டு தளபதிதான்வருகிறார்கள் என்று சொல்லிவிட்டேன். ஒரு நிமிடம் அவர் துள்ளிக்குதித்துவிட்டார்.
காட்சியை ரிகர்சல் பார்ப்பதற்காக வந்த இயக்குனர் அட்லி, ஆட்டோ டிரைவரை இறங்கி ஓரமா நிற்கச் சொலிவிட்டார். வேறு ஒருவரை அழைத்து ஆட்டோவை எடுக்கச் சொல்றார். அந்த ஆட்டோ டிரைவர் பரிதாபமாக பார்த்தார்.
எனது மனசே சங்கடமாகிவிட்டது- மனசு கேக்காமா அந்த 'டிரைவர் தளபதி ரசிகர்'னு மெதுவாக இயக்குனரிடம் சொன்னேன். அவரும் 'அப்படியா என்று கேட்டுட்டு நகர்ந்தார். 'டேக்' போக ரெடியானதும் விஜய் வந்து ஆட்டோவில் ஏறினார்,. திடீர்னு 'அண்ணே நீங்க இப்படி வாங்க'னு முதலில் ஆட்டோ ஓட்ட அழைக்கப்பட்டவரை இறங்கச் சொல்லிட்டு, ஓரமாக நின்ற ஆட்டோ டிரைவரை அழைத்து ஆட்டோவை ஸ்டார்ட் செய்யச் சொன்னார் அட்லி. எனக்கே அது மகிழ்ச்சியாக இருந்தது அந்த ஆட்டோ டிரைவருக்கு அது வாழ்நாள் சாதனைபோலவே தெரிந்திருக்கும். இந்த சம்பவத்தை தளபதியின் ரசிகர்கள் எப்படி கொண்டாடுவார்கள் என்பதை கேட்கவும் வேண்டுமா..