கார்த்தியால் ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் போலீஸான நரேன்.. லோகேஷ்கனகராஜ் 50 இரவில் படப்பிடிப்பு..
கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தீபாவாளிக்கு 2 நாட்களுக்கு முன்பாக 25ம் தேதி திரைக்கு வருகிறது கைதி. ஹாலிவுட் பாணி படங்கள்போல் சில ஒரு நாள் இரவில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டிருக்கும்.
அதுபோல் இப்படத்தின் காட்சிகள் ஒருநாள் இரவில் நடப்பதுபோல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு நொடி இமை மூடினாலம் அந்த சீன் பறந்துவிடும் என்று கார்த்தி ஏற்கனவே கூறியிருந்தார். இது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தில் அஞ்சாதே பட ஹீரோ நரேன் முக்கியவேடத்தில் நடிக்கிறார் நரேன்.
இதுபற்றி அவர் கூறியதாவது:
கைதி படத்தில் ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் போலீஸாக நான் நடிக்கிறேன். நிஜத்தில் கார்த்தியும் நானும் நெருக்கமான நண்பர்கள். போனில் இருவரும் பல மணி நேரம் மனம் விட்டு பேசுவோம். இயக்குநர் லோகேஷ் என்னை நடிக்க வைக்கலாம் என்று என் பெயரை சொன்னதும் கார்த்தியே எனக்கு போன் செய்து பேசினார். அஞ்சாதே படத்துக்கு பிறகு நிறைய போலீஸ் கேரக்டர் வந்தது. ஒரே பாணியில் இருந்ததால் அவைகளை ஏற்கவில்லை, கைதியில் எப்படி என்று கேட்டேன். நல்ல கேரக்டர் என கார்த்தி சொன்னார்.
நீங்க பண்றீங்களானு கேட்டேன் ஆமாம் என்றார் உடனே நான் நடிக்க ஒப்புக்கொண்டேன்.டைரக்டர் லோகேஷ் இயக்கிய மாநகரம் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்தது. லோகேஷ், கைதி கதையை என்னிடம் சொன்ன பத்து நிமிஷத்திலேயே கண்டிப்பாக படம் சூப்பராக இருக்கும் என்று தெரிந்தது. லோகேஷ், கார்த்தி எல்லாரும் டிஸ்கஸ் செய்து ஒவ்வொரு ஷாட்டையும் புதிய ஸ்டைலில் முயற்சி செய்து படமாக்கியிருக்கிறார்கள்.
அடர்ந்த காட்டில் நடுங்கும் குளிரில் 50 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படியொரு படத்தில் நடித்தது சந்தோஷம். இப்படம் தீபாவளி கொண்டாட்டமாக இருக்கும். எனக்கும் ரீஎன்ட்ரி ஆக அமைந்து திருப்புமுனை தரும் என்று நம்புகிறேன்.