லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம்... மில்கி ஒயிட் பட்டம் போதும்... தமன்னா தடாலடி
நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் நடிகை என்று சிலர் குறிப்பிடுகின்றனர். அப்படியொரு பட்டம் உங்களுக்கு தந்தால் ஏற்பீர்களா என்று தமன்னாவிடம் கேட்டபோது நடிகைகள் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு நான் ஆசைப்படவில்லை என்றார்.
மேலும் அவர் கூறும்போது,' எனக்கு மில்கி ஒயிட் என்ற பட்டம் இருக்கிறது. அதுவே போதும். சூப்பர் ஸ்டார் பட்டமெல்லாம் எனக்கு வேண்டாம். நான் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளில் மட்டும்தான் நடிப்பேன் என்று ஒருபோதும் கூறியதில்லை.
ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறேன். அவ்வப்போது சோலோ ஹீரோயின் வேடம் வரும்போது பிடித்திருந்தால் ஏற்கிறேன். அப்படித்தான் பெட்ரோமாக்ஸ் படம் வந்தது நடித்தேன்.
ரஜினிசாருடன் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா என்கிறார்கள். வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். அதற்காக காத்திருக்கிறேன்.