ஹாரிஸ் ஜெயராஜுக்கு டாக்டர் பட்டம்... இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகை சோபனா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டது. இவர்களுடன் இணைந்து டாக்டர் பட்டம் பெறுவதில் மிகுந்த கௌரவம் என்று இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
டாக்டர் பெறும் ஹாரிஸுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2 ஆஸ்கார் விருதுகள் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஐந்து பல்கலைக்கழகங்களில் கௌரவ டாக்டர் பட்டங்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.