டெல்லி பறக்கிறது தளபதி 64 டீம்.. கேங்ஸ்டர் ஆக நடிக்கிறார் விஜய்..

பிகில் படம் தீபாவளிக்கு வர உள்ள நிலையில் தளபதி 64 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. இப்படத்தில் கேங்ஸ்டராக விஜய் நடிக்கிறார்.

கைதி படத்தை படுவேகமாக இயக்கி முடித்த லோகேஷ் கனகராஜ் விஜய் 64 படத்துக்காக கில்லியாக சுழன்று பணியாற்றுகிறார். கேங்ஸ்டராக விஜய் நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றொரு கேங்ஸ்டராக நடிக்க உள்ளார் என்று தெரிகிறது. கதாபாத்திரத்திலும், மாளவிகா மோகன் நாயகிகவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்ற 3 ஆம் தேதி தளபதி படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. சென்னையில் பரப்பரபாக நடைபெற்று வரும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு டெல்லி செல்ல தயாராகிறது.

தலைவா படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>