மாதரே பாடல் வெளியிட்ட பிகில்” படக்குழு.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சின்மயி குரலலில்..
தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வரும் 25 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அட்லி இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், டேனியல் பாலாஜி, ஆனந்த ராஜ், விவேக், இந்துஜா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி யூடியூபில் ட்ரெண்டிங் ஆனது. இப்படத்தில் சின்மயி பாடியுள்ள "மாதரே" பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட் டுள்ளது. மேலும் இந்தப் பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார்.