இருட்டு அறையில் முரட்டு குத்து 2ம் பாகம்.. யாஷிகா நடிக்கவில்லை..
கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடித்த அடல்ட் படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.
ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிரைந்திருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதே சமயம் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பும் வந்தது சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி இருந்தார். அவர் மீண்டும் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2 ஆம் பாகம் என தெரிகிறது.
புதிய நடிகர், நடிகைகள் மற்றும் முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். ஆனால் முதல் பாகத்தில் நடித்த யாஷிகா ஏர்கெனவே அளித்த பேட்டியில் இருட்டறை முரட்டு குத்து படத்தில் நடித்தது எனது தவறு மீண்டும் அடல்ட் படத்தில் நடிக்க மாட்டேன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ளதாகவும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளிக்கு பின் அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.