விஜய்யின் ”பிகில்” முதல்நாள் முதல் காட்சிக்கு கொட்டும் மழையில் காத்துக்கிடக்கும் வெறித்தன ரசிகர்கள்...
அட்லி இயக்கத்தில் விஜய் கால்பந்தாட்ட கோச்சாகவும், தாதாவாகவும் இருவேடத்தில் நடிக்கும் படம் பிகில். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல், டிரைலர் செம ஹிட்டானது.
பெரும் எதிர்ப்பார்ப்புக்கு இடையே தீபாவளியையொட்டி வரும் அக்.25ம் தேதி உலகம் முழுவதும் படம் ரிலீஸ் ஆகிறது. பிகில் படத்தை முதல் நாள் முதல் காட்சியை காண வெறித்தன ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவில் பரபரப்பாக உள்ளனர். இதற்கிடையில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. மழையால் பிகில் வசூலுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று எண்ணிக் கொண்டிருந்தநிலையில் இடியாவது மழையாவது எதுவும் பொருட்டில்லை என்பது போல் ரசிகர்கள் கொட்டும் மழையில் தியேட்டரில் கியூவில் காத்துகிடக்கின்றனர்.
டிக்கெட்டுக்கு டிமாண்ட் அதிகம் இருப்பதால் ஆயிரம் ரூபாய்க்குமேல் டிக்கெட் ரேட்டை சிலர் ஏற்றி விற்பதாக கூறப்படுகிறது.