ஓவியாவுடன் சுற்றுவேன் ஆனால் காதல் இல்லை.. ஆரவ் அதிரடி விளக்கம்...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ்-ஓவியா இருவரும் நெருங்கி பழகினார்கள். பின்னர் காதலை ஆரவ் முறித்ததாக மனம் உடைந்து அங்குள்ள நீச்சல் குளத்தில் குதித்து ஓவியா தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு ஏற்பட்டு போலீசார் நேரில் விசாரித்த சம்பவத்தையெல்லாம் ரசிகர்கள் டிவியில் பார்த்தனர்.
எல்லாம் ஓய்ந்து ஓவியாவும், ஆரவ்வும் சினிமாவில் நடிக்க வந்தனர். அப்போதும் இருவரும் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசு பரவிய வண்ணம் இருந்தது. தாய்லாந்தில் இருவரும் ஜோடியாக சுற்றிய புகைப்படமும் வலைத்தளத்தில் வெளியானது.
இந்த நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆரவிடம் நீங்களும், ஓவியாவும் ஜோடியாக சுற்றுகிறீர்களே? இருவரும் காதலிக்கிறீர்களா? என்று கேட்டனர். அதற்கு ஆரவ்.நானும், ஓவியாவும் நல்ல நண்பர்கள். நாங்கள் காதலிப்பதாக சொல்வதில் உண்மை இல்லை.
இருவரும் ஜோடியாக சுற்றுவதில் என்ன தவறு இருக்கிறது? அது ஒன்றும் குற்றம் இல்லையே? எனது முழு கவனமும் இப்போது சினிமாவில் இருக்கிறது. நடிப்பில் பெயர் வாங்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் நடித்துள்ள மார்க்கெட் ராஜா மற்றும் ராஜா பீமா அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளது. வெளியாகும். ஓவியாவுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்றார்.