கார்த்தியின் ”கைதி” பட தயாரிப்பாளர் அதிரடி டிவிட்... விஜய் ரசிகர்களின் மோதலாக மாறியது..
விஜய் நடித்த பிகில், கார்த்தி நடித்த கைதி தீபாவளியை முன்னிட்டு வருகிற 25ம் தேதி திரைக்கு வருகிறது. அதற்கான டிக்கெட் முன்பதிவு நடக்கிறது. வழக்கமாக அஜீத் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் பட ரிலீஸின்போது இணைய தளத்தில் மோதல் நடக்கும். இம்முறை அது விஜய் மற்றும் கார்த்தி ரசிகர்களுக்கு இடையேயான மோதலாக மாறி உள்ளது.
விஜய் ரசிகர் ஒருவர் ' பிகில் திரைப்படத்தை முன் பதிவு செய்ய முயன்றபோது தெரியாமல் கைதி படம் புக் ஆகிவிட்டது' என கிண்டலடித்து அதை கைதி பட தயாரிப்பாளர் பிரபுவிற்கு டேக் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த பிரபு 'தம்பி. உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு.. அறிவு இல்ல போ' என கலாய்த்திருந்தார்.
இது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. தயாரிப்பாளருக்கு எதிராகவும், கார்த்தியின் கைதி படத்துக்கு எதிராகவும் திட்டி வருகின்றனர். இந்த மோதல் மல்ட்டி ஸ்டார் ரசிகர்களின் மோதலாக மாறி வருகிறது. கார்த்தி, சூர்யா, அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்களுக்கு பதிலடி தரும்வகையில் திட்டி வருகின்றனர்.