விக்னேஷ்சிவன் மீது தனுஷ் ரசிகர்கள் கோபம்... பட வாய்ப்பு தந்தவரின் புகைப்படத்தை மறந்தது ஏன்?
நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவான படம் நானும் ரவுடிதான். விக்னேஷ்சிவன் இயக்கினார். இதில் நயன்தாரா காதுகேளாத மாற்றுத்திறனாளியாக நடித்திருந்தார். அவரது தந்தையை தேடி தர உதவும் ஹீரோவாக விஜய்சேதுபதி வேடம் ஏற்றிருந்தார். அப்படத்துக்கு ரசிகர்களிடம் பாராட்டும். வரவேற்பும் கிடைத்தது.
நானும் ரவுடிதான் திரைக்கு வந்து நான்கு வருடங்கள் முடிந்ததை கொண்டாடும் விதமாக தனது ட்விட்டரில் விக்னேஷ் சிவன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் சேதுபதி, நயன்தாரா துவங்கி படத்தை தயாரித்த தனுஷ், வாங்கி வெளியிட்ட லைகா நிறுவனம் வரை அனைவருக்கும் நன்றி கூறிவிட்டார். இத்துடன் இணைத்து சில படங்களையும் வெளி யிட்டுள்ளார்.
அதில் விஜய்சேதுபதி, நயன்தாரா, ஆர்.ஜே பாலாஜி போன்றவர்களின் படம் இடம்பெற்றுள்ளது. தயாரிப்பாளரான தனுஷ் புகைப்படம் இல்லை. அதைக்கண்டு கோபமான தனுஷ் ரசிகர்கள், படம் தயாரித்து அதை இயக்குவதற்கு விக்னேஷ்சிவனுக்கு வாய்ப்பு தந்தவர் தனுஷ்.
ஆனால் அவரது புகைப்படத் தை தவிர மற்றவர்களின் புகைப்படத்தை வெளியிட்டிருப்பது விக்னேஷ் சிவனின் நன்றி மறந்த செயல் என விக்னேஷ் சிவனுக்கு தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் டோஸ் விட்டுக்கொண்டிருக்கின்றனர்.