நித்யாமேனன் வாய்ப்பை கைப்பற்றிய அதிதி.. அருவிக்கு பிறகு நீண்ட இடைவெளிவிட்டு நடிக்கிறார்
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவராக பெரும்பாலான நடிகைகள் நடிக்க மறுத்துவிட்ட நிலையில் அருவி படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்புக்கொணடார் அதிதி பாலன்.
அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவான அருவி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இப்படம் வெளியாகி விமர்சன ரீகியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வந்த நிலையில், இவர் எந்த படத்தையும் ஏற்கவில்லை.
இந்நிலையில், இயக்குனர் ஷாகித் காதர் மலையாளத்தில் இயக்கவுள்ள ஸ்போர்ட்ஸ் கதை கொண்ட படத்தில் அதிதி நடிக்கவுள்ளார். இந்த கதாபாத்திரத்தில் முதலில் நித்யா மேனன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், கால்ஷீட் காரணமாக நித்யா மேனன் இதிலிருந்து விலகியுள்ளார். இதனை தொடர்ந்து இப்படத்தில் அதிதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.