கோபி நயினார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்

மிகுந்த பாராட்டைப் பெற்ற ‘அறம்’ படத்தின் இயக்குநர் கோபி நயினார் இயக்க இருக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இந்தப் படம் வட சென்னையை மையமாகக் கொண்டு தயாராக இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இது, ஆக்ஷன் கலந்த பொழுதுபோக்கு கதையாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றது. இதில், குத்துச்சண்டை காட்சிகள் இடம்பெறும் என்றும், இதற்காக, ஜி.வி.பிரகாஷ் பயிற்சி பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘நாச்சியார்’ படம், சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் கோபி நயினார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>