பிகில் வெற்றிக்காக மாரியம்மன்கோயில் மண்சோறு சாப்பிட்ட ரசிகர்கள்... டிக்கெட் முன்பதிவுக்கு அலைமோதும் ரசிகர்கள்..
நடிகா் விஜய் நடிப்பில் பிகில் வெளியாக உள்ள நாளில் பட்டாசு வெடிக்க பரபரப்புடன் காத்திருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஒருபுறமிருக்க மற்றொரு புறம் படம் வெற்றி அடைவேண்டும் என்பதற்காக அவரது ரசிகா்கள் கோயிலில் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினா்.
தீபாவளிக்கு 2 நாள் முன்னதாக 25ம் தேதி பிகில் வெளியாகிறது. படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் முன்பதிவுக்காக தியேடட்ரில் அலைமோதிக்கொண்டிருக்கின்றனர். பிகில் படம் திரையிடும் நேரம், டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பட தயாரிப்பாளர் அர்ச்சான கல்பாத்தி தனது இணைய தள பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் பிகில் திரைப்படம் வெற்றியடைய வேண்டி, நாகை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சாா்பில், மயிலாடுதுறை வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்கள் கோயிலில் வெறுந்தரையில் மண்சோறு சாப்பிட்டு, பிரார்த்தனை செய்தனா்.