இந்தியாவில் ஆண்டுக்கு 6 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன!- யுனிசெப் தகவல்

இந்தியாவில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் குழந்தைகள் பிறந்த உடன் இறப்பதாக யுனிசெப் மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஐ.நா சபையின் அங்கமான யுனிசெப் சர்வதேச அளவில் குழந்தைகள் நலனுக்காக செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு ஆகும்.

இந்த அமைப்பு சமீபத்தில் சர்வதேச அளவில் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் குறித்து ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டது. இதில் ஆண்டில் இந்தியாவில் மட்டும் 6 லட்சம் குழந்தைகள் பிறந்த 75 நாள்களிலேயே இறந்துவிடுகிறதாம்.

இந்த இறப்பு விகிதங்களுக்காக் காரணம் மிகவும் சாதாரணமான குணப்படுத்தும் சில பிரச்னைகளாக மட்டுமே இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தைகள் இறப்பு விகிதம் இந்தியாவில் சமீப காலமாகக் குறைந்திருந்தாலும், சர்வதேச அளவில் இந்த விகிதத்தில் இந்தியா 31-வது இடத்தில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>