1620 சட்ட விரோத இணைய தளங்களில் கைதி படம் வெளியிட தடை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் கைதி.இப்படம் நாளை மறுதினம் 25ம் தேதி திரைக்கு வருகிறது. இது தீபாவளியையொட்டி 2 நாட்களுக்கு முன்னதாக ரசிகர்களுக்கு விருந்தாக ரிலீஸ் செய்யப்படுகிறது.
இப்படத்தை தயாரித்துள்ள ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், சட்டவிரோதமாக இணையதளங்களில் கைதி படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 1,620 சட்டவிரோத இணையதளங்களில் கைதி திரைப்படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.