கார்த்தி கைதி படத்துக்காக நிஜ கைதிகளை சந்தித்து சிறை அனுபவங்களை கேட்டேன்... இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஸ்பெஷல் பேட்டி....
கார்த்தி நடிப்பில் கைதி படம் தீபாவளியை யொட்டி நாளை 25ம்தேதி திரைக்கு வருகிறது. இதுபற்றி அப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று சிறப்பு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
கைதி படத்தில் கார்த்தி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் இரவில்தான் நடந்தது. இரவில் படப்பிடிப்பு தொடங்கி காலையில் தான் முடியும், 12 மணிக்கு மேல்தான் ஆக்ஷன் காட்சிகள் அதாவது சண்டை காட்சியில் நடிக்கவேண்டும் நள்ளிரவு இரண்டு முன்று மணிக்குத்தான் அழுது நடிக்க வேண்டும். வசனம் பேச வேண்டும்.. லாரி ஓட்டவேண்டும். இதுபோன்று பல சவால்கள் சந்தித்துதான் நடித்துள்ளார். கடினமான அவரது உழைப்பு திரையில் வெளிப்படும்.
இப்படத்தில் கதாநாயகி கிடையாது. 4 மணி நேரத்தில் நடந்து முடிவதுபோல் கதை அமைக்கப்பட்டிருப்பதால் கதாநாயகி பாத்திரம் தேவைப்படவில்லை. ஆனால் பெண் கதாபாத்திரங்கள் படத்தில் இருகின்றன.
இப்படத்தின் திரைக்கதை உருவாகுவதற்கு முன் ஆராய்ச்சிக்காக சிறையிலிருந்த வந்த நிஜ கைதி களை நேரில் சந்தித்து அவர்களது சிறை அனுபங்களை கேட்டறிந்தேன். கைதி பட கதைக்கு பத்திரிகையில் வந்த ஒரு செய்தியும் அடிப்படையாக அமைந்தது. அதை மையமாக வைத்துத்தான் இப்படத்தின் கதையே உருவானது.
இவ்வாறு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறினார்.