தீபாவளியில் விஜய்க்கும் கார்த்திக்கும் போட்டியா? விஜய் 64 இயக்குனர் நழுவல்...

தீபாவளிக்கு விருந்தாக நாளை விஜய் நடித்துள்ள பிகில். கார்த்தி நடித்துள்ள கைதி திரைக்கு வருகிறது. இதில் ஒரு டுவிஸ்ட் என்னவென்றால் கைதி படத்தை இயக்கி உள்ள லோகேஷ் கனகராஜ் தான் விஜய் நடிக்கும் 64வது படம் இயக்குகிறார். அவர் இயக்கும் கைதி படம் பிகிலுக்கு போட்டியாகியிருப்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

தீபாவளிக்கு விஜய், கார்த்திக்கு இடையே நடக்கும் போட்டியா? பிகில் படத்துக்கும் கைதி படத்துக்கும் இடையே நடக்கும்போட்டியா? என்றதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், இது யாருக்கும் இடையேயும் நடக்கும் போட்டி இல்லை.

இரண்டு படமும் வெற்றிபெற வேண்டும் என்று சாதுர்யமாக பதில் சொல்லி நழுவினார் லோகேஷ் கனகராஜ்.

விஜய் 64 படம் பற்றி கேட்டபோது, இப்போதுதான் விஜய் 64 படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இன்னும் சில நாட்களுக்கு பிறகு விஜய் 64 பற்றி சொல்கிறேன் என்றார் லோகேஷ்.

More News >>