தல அஜீத், வலிமை படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா ? ரசிகர்கள் ஷாக்...
தல அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத் அடுத்து அஜித் நடிக்கும் வலிமை படத்தை இயக்குகிறார். இதன் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது.
வரும் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக அஜீத் நடிக்கிறார். இதே படத்தில் பெண் போலீஸ் அதிகாரியாக நடிக்க நயந்தாராவிடம் கேட்கப்பட்டதாம். அவர் நடிக்க ம்றுத்துவிட்டாராம் போலீஸாக நடிப்பதில்லை என்பது நயன்தாராவின் பாலிசியாம்.
பட புரமோஷனில் பங்கேற்பதில்லை என்ற பாலிசிதான் இதற்குமுன் சொல்லி வந்தார். போலீசாக நடிக்க மாட்டேன் என்பது புது பாலிசியாக இருக்கிறதே என்று பலரும் ஆச்சரியமாக கேட்கின்றனர். விஸ்வாசம் படத்தில் அஜீத்துடன் சேர்ந்து நடித்த நயன்தாரா தற்போது அஜீத்துடன் நடிக்க மறுத்ததாக வந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதாம்.