விஜய் பிகில் டிக்கெட் கிடைக்காமல் ”கனா” இயக்குனர் ஏமாற்றம் தயாரிப்பாளருக்கும் அதே நிலை... எப்பூடி...
தளபதி விஜய், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் நாளை 25ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ரசிகர்கள் முதல் நாள் முதல்காட்சியை டிக்கெட்டுக்காக ஆளாய் பறந்துகொண்டிருக்கின்றனர். டிக்கெட்டை பெற மிகவும் கடுமையாக முயற்சியும் செய்து வருகின்றனர். சில திரைப்பட பிரபலங்களும் இதே நிலையில் தான் உள்ளதாக கூறுகின்றனர்.
சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த இயக்குனர் அருண் காமராஜா தனது டுவிட்டரில் பிகில் டிக்கெட் என்னிடம் கேட்பவருக்கு இதுதான் பதில் என வடிவேலுவை வைத்து ஒரு ஏமாற்றமான டுவிட் போட, அதே பீலிங்கில் தான் நான் என பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனாவும் டுவிட் செய்துள்ளார்.
எங்கே, அருண்காமராஜ் தன்னிடம் டிக்கெட் கேட்டுவிடுவாரோ என்று அவசர அவசரமாக தயாரிப்பாளர் முந்திக்கொண்டு பிலிங்கை சொல்லியிருக்கிறார் என சிலர் கமெண்ட் பகிர்கின்றனர்.