பிகில் இந்தியளவில் ட்ரெண்டிங் ... மாஸ் காட்டிய ரசிகர்கள்...

நாளை மறுதினம் 27ம் தேதி தீபாவளி என்றாலும் விஜய் ரசிகர்களை பொறுத்தவரை இன்றே தீபாவளியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தளபதி விஜய் நடித்துள்ள பிகில் படம் நேற்று அதிகாலையிலேயே சிறப்பு காட்சி திரையிடப் பட்டதில் மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தியேட்டருக்கு வெளியே வேட்டுசத்தம் தியேட்டருக்கு உள்ள விஜய்யின் அதிரடி ஆக்‌ஷன் சத்தமாக ரணகளமாகிக் கொண்டிருக்கிறது. கதை திருட்டு, காப்புரிமை, சிறப்பு காட்சிக்கு தடை என வெவ்வேறு ரூபங்களில் வந்த தடைகளை கடந்து விஜய்யின் பிகில் படம் நேற்று திரைக்கு வந்துள்ளதே இவ்வளவு ஆர்ப்பாட்டத்துக்கும் காரணம்.

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் விஜய் ராயப்பன் , மைக்கேல் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் திரையிடப்பட்ட பிகில் படத்திற்கு ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்திருக்கின்றனர்.

பிகில் படத்தை விஜய் ரசிகர்கள் #BigilFDFS #BigilReview #Rayappan #BigilFromToday #BigilDiwali என வெவ்வேறு பெயர்களில் ஹேஷ்டேகுகள் உருவாக்கி சென்னை மற்றும் இந்திய அளவில் டிரெண்டாக்கி மாஸ்காட்டி உள்ளனர்.

More News >>