விஜய் ராயப்பனுக்கு சிலை வைத்த ரசிகர்கள்... கேரளாவில் விஜய் பட்டாளம் அதகளம்...
விஜய் படத்துக்கு தமிழ்நாட்டில் இருக்கும் வரவேற்பும், அவருக்கான ரசிகர் வட்டமும் கேரளாவில் அதிகம். மம்மூட்டி, மோகன்லால் படங்களுக்கு இணையாக மட்டுமல்லாது அவர்களின் பட வசூலையைும் தாண்டி விஜய் படங்கள் கேரளாவில் வசூலை அள்ளிக்குவிக் கிறது.
ஆனாலும் இம்முறை விஜயின் பிகில் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் முன்வர வில்லை என்று கூறப்பட்டது. ஆனால் நடிகர் பிருத்விராஜ் பிகில் படத்தை வாங்கி வெளியிட்டார். அங்கும் பிகிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் விஜய் கேட்டுக்கொண்டதற்கிணங்க தியேட்டர்களில் கட் அவுட்கள் எதுவும் பிகிலுக் காக வைக்கப்படவில்லை. பெயருக்கு ஒன்றிரண்டு கட்அவுட் வைத்திருக்கின்றனர். ஆனால் கேரளாவில் பிகிலை கொண்டாடும் வகையில் அங்குள்ள ரசிகர்கள் பிகில் படத்தில் வரும் ராயப்பன் விஜய்க்கு சிலை வைத்து கொண்டாடினர்.