விஜய்-கார்த்தி ரசிகர்கள் சண்டை போடாதீங்க.. யோகி பாபு கோரிக்கை..
தீபாவளியை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு முன்னதாக 25ம் தேதி பிகில், கைதி திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் ரிலீஸுக்கு முன் விஜய், கார்த்தி ரசிகர்களுக்கிடையே நெட்டில் கடுமையான மோதல் ஏற்பட்டது.
கைதி தயாரிப்பாளருக்கு விஜய் ரசிகர் அனுப்பிய ஒரு மெசேஜ் அவரை கடுப்பேற்ற பதிலுக்கு தயாரிப்பாளர் ஒரு மெசேஜ் போட அது தீயாக பற்றிக்கொண்டது இதையடுத்து வார்த்தை மோதல்கள் அதிகரிக்கத் தொடங்கின. அவர்களை சிலர் சமாதானம் செய்த நிலையில் தற்போது காமெடி நடிகர் யோகிபாபு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் 'விஜய் சார் ரசிகர்கள், கார்த்தி சார் ரசிகர்கள் எந்தவித சண்டையிலும் அசம்பாவிதங்களிலும் ஈடுபடவேண்டாம். தேவையில்லாத கருத்துகளைக் கூற வேண்டாம். இரு படங்களுமே மாபெரும் வெற்றியடைய வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.