விஜய் படத்தை பாராட்டும் அஜீத் ரசிகர், ரசிகைகள்... பிகில் வேற லெவல்...
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் அவரது ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல்போல் இனித்திருக்கும் நிலையில் அஜித் ரசிகர்களும் படம் பற்றி விமர்சனம் எழுதி வருகிறார்கள். வழக்கமாக அஜீத் ரசிகர்கள் விஜய் படத்தை கழுவி ஊற்றுவார்கள்.
அந்தநிலை இம்முறை மாறியிருக்கிறது. பிகில் படம் எங்களுக்கும் திருப்தியாக இருக்கிறது என்று அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
விதுஷன் என்ற அஜீத் ரசிகர் கூறும்போது, 'நான் அஜீத் ரசிகன், ஆனாலும் பிகில் படம் வெறித்தனம். படத்தின் இசையில் பிஜிஎம் பகுதியை ஏ. ஆர் ரகுமான் வேறலெவலில் அமைத்திருக்கிறார்' என குறிப்பிட்டிருக்கிறார்.
கனகாம்பரி என்பவர் கூறும்போது,'நானும் ஒரு அஜித் ரசிகைதான்..ஆனால் பிகில் படம் நேர்கொண்ட பார்வை படத்தை விட பலமடங்கு நல்லாயிருக்கு. நல்ல கருத்துள்ள படம். ஒரு அஜித் ஃபேனா சொல்றேன் பிகில் படம் வேற லெவல்.
அஜீத் ரசிகை லாரா அலவினா என்பவர் விஜய் ரசிகர்களை பார்த்து. இந்த தீபாவளி உங்களோடது என குறிப்பிட்டு தம்ஸ் அப் எமோஜியை காட்டியிருக்கிறார்.
அவர்களைப்போலவே சூர்யா ரசிகர்களும் பிகிலை பாராட்டி வருகின்றனர். அட்லீ னு ஒரு மனுஷன் எல்லாரையும் திருப்திப்படுத்துறார்யா. இந்த தீபாவளி நம்முடையது தான் என்று அவர் டிவிட்டில் தெரிவித்துள்ளார்.