பிகில் படத்துக்கு ட்விட்டர் வெளியிட்ட விஜய் எமோஜி...
விஜய், அஜீத் ரசிகர்களின் சமூக வலைதள மோதல் மிகவும் பிரபலம் மட்டுமல்ல பரபரப்பாகவும் நடந்துகொண்டிருக்கிறது. படம் வெளியாகும்போது என்றில்லாமல் எந்த நேரத்திலும் இந்த மோதல் நடக்கலாம்.
குறிப்பாக அஜீத், விஜய் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகும்போது நிச்சயம் நடக்கும். இம்முறை டிரெண்டே மாறியிருக்கிறது. விஜய்யின் பிகில் படத்தை அஜீத் ரசிகர்களே பாராட்டி வருகின்றனர். தவிர பிகில் படத்தை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்டிங் ஆக்கி உள்ளனர்.
எவ்வளவு பெரிய மோதல்கள் நடந்தாலும் டிவிட்டர் எதையும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதும் ஒரு வியபார நோக்கம்தான். அதேசமயம் இது அந்தந்த நடிகர்களின் படங்களுக்கு கிடைக்கும் இலவச விளம்பரமாகவும் அமைகிறது என்பதில் சந்தேகமில்லை.
மிக முக்கியமான தருணங்களில் கூகுல் மற்றும் ட்விட்டர் சமூக வலை தள பக்கங்கள் அந்தந்த நிகழ்வை பொறுத்த எமோஜி படங்களை வெளியிடுவது வழக்கம். ஏற்கனேவே ரஜினி நடித்த காலா, சூர்யா நடித்த என்ஜிகே படங்களுக்கு எமோஜி வெளியிட்ட நிலையில் தற்போது பிகில் படத்துக்கு எமோஜி வெளியிட்டுள்ளது.
ஆனால் அஜீத் படம் எதற்கும் இதுவரை டிவிட்டரில் எமோஜி வெளியிட்டத்தில்லை.