ரசிகர்களை கைதி யாக்கிய கார்த்தியின் கைதி, மகிழ்ச்சியில் கார்த்தி, லோகேஷ், எஸ்ஆர் பிரபு
விஜய்யின் பிகில் வெளியான அதேநாளில் கார்த்தியின் கைதியும் வெளியானது. பிகில் எதிர்பார்ப்பு இமாலய அளவுக்கு இருந்த நிலையில் கைதியின் எதிர்பார்ப்பு சற்று குறைவாக இருந்தது.
ஆனாலும் அப்படத்திற்கான புரமோஷன் பெரும் அளவுக்கு படத்தின் தரம்பற்றிய தகவல்கள் ரசிகர்களுக்கு தெரியவந்தது தற்போது படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு அப்படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கும், ஹீரோ கார்த்திக்கும் பெரு மகிழ்ச்சி தந்துள்ளது.
கைதி படம் பற்றிய பாசிடிவான விமர்சனங்கள் நேற்று காலை முதலே சமூக வலைத்தளங்களில் தென்பட்டதுடன் மவுத் டாக் எனப்படும் வாய்மொழி பாராட்டும் அதிகரித்த வண்ணமிரந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் திரைக்கதையை வெகுவாக பாராட்டியிருந்தனர். தற்போது வசூல் நிலவரமும் அதிகரித்திருக்கிறது.
தியேட்டருக்குள் செல்லும் ரசிகர்களை படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை இருக்கையை விட்டு நகர விடாமல் கைதியாக்கிவிடுகிறது கைதி படம் என்றும் பல ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி அறிந்து கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ' கைதி படத்திற்கு வரவேற்பு அளித்ததற்கு நன்றி.. இப்படத்தை இயக்க எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் பிரபு சார், ஹீரோ கார்த்தி சாருக்கு நன்றி' என பதிவிட்டுள்ளார்.