இலியானாவின் டூ பீஸ் கவர்ச்சிக்கு 7 லட்சம் லைக்குள்.. ரசிகர்களுக்கு அன்பான அட்வைஸ்...
இணைய தளத்தில் நடிகைகள் பிஸியாக இருக்கின்றனர். தங்களது அன்றாட பணிகள் பற்றி பகிர்வதுடன் தங்களது தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் விதவிதமான காஸ்டியூம் அணிந்து புகைப்படங்கள் பகிர்கின்றனர். நடிகை இலியானா இதில் ரொம்பவே வேகம் காட்டுகிறார். காதலனோடு இருந்தபோதும், அவரை விட்டு பிரிந்தபோதும் தனது நிலையை உடனக்குடன் பகிர்ந்துகொள்கிறார்.
சமீபகாலமாக கடும் உடற்பயிற்சி செய்து தோற்றத்தை ஸ்லிம்மாக்கியிருக்கிறார் இலியானா. அதை வெளிப்படுத்தும் வகையில் நேற்று ஒரு கிக்கான படத்தை வெளியிட்டிருக்கிறார்.
நீச்சல் குளத்தின் அருகில் இருக்கும் பெஞ்சில் டூ பீஸ் உடையில் கூலிங்கிளாஸ் அணிந்துகொண்டு மல்லாக்கபடுத்தபடி சூரிய குளியல் (சன்பாத்) எடுத்துக்கொண்டிருந்தார்.
அதை புகைப்படமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். சன்பாத் எடுப்பதே உடற் கவர்ச்சியை வெளிப்படுத்தத்தான் என்பதுபோல் படுகவர்ச்சியாக படம் எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்ததுடன் ஒரு அட்வைஸ் தந்திருக்கிறார்,'நீண்ட நேரம் வெளியில் இருக்காதீர்கள். வெயிலிலேயே சுற்றிக்கொண்டிருந்தால் உடல்நிறம் கறுப்பாயிடும்' என தெரிவித்துள்ளார்.
அட்வைஸ் செய்வதுபோல் கவர்ச்சியை வெளிப்படுத்திய இலியானாவின் இன்ஸ்டா பதிவுக்கு 7 லட்சத்துக்கும் அதிமானவர்கள் லைக்ஸ் கொடுத்திருக்கின்றனர்.