சிரஞ்சீவி வீட்டில் குவிந்த நடிகைகள்.. 80களின் நட்சத்திரங்கள் சந்திப்பு...
1980களில் நடிக்க வந்த திரைப்பட நட்சத்திரங்கள் கடந்த 10 வருடமாக வருடத்துக்கு ஒருமுறை ஒரு இடத்தில் சந்தித்து தங்களின் நட்பை புதுப்பித்துக் கொள்கின்றனர்.
இந்த ஆண்டு ஐதராபாத்தில் நடிகர் சிரஞ்சீவின் புதுப்பொலிவடைந்த பங்களாவில் நடந்தது. கிளாஸ் ஆப் எய்டீஸ் (Class of Eighties) என்ற பெயரில் இந்த சந்திப்பு நடக்கிறது. இம்முறை பிங்க் நிற டிரஸ்கோட் அணிந்து நட்சத்திரங்கள் சந்தித்தனர்.
வழக்கமாக ரஜினிகாந்த், சரத்குமார், பிரபு, சத்யராஜ், பாக்யராஜ், மோகன்லால், பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், சுரேஷ், சுமன், ஜாக்கி ஷெராப், ராதிகா, அம்பிகா, ராதா, பூர்ணிமா, ரேவதி, லிசி, சுமலதா, ஷோபனா, சுஹாசினி, நதியா என இன்னும் சிலரும் இந்த சந்திப்பில் பங்கேற்பார்கள்.
இம்முறை ரஜினி உள்ளிட்ட ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் ஆஜராகியிருந்தார்கள். அப்போது ஒவ்வொருவரும் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.