அட்லியிடம் வாய்ப்பு கேட்ட வாரிசு நடிகர் சாந்தனு... இன்னொரு காதல் கதைக்கு யோசனை...
விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என ஆக்ஷன் படங்களை இயக்கிய அட்லீ அதற்கு முன்பாக காதல் ரசம் சொட்டும் விதமாக ராஜாராணி என்ற படத்தை இயக்கினார்.
இதில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நடித்திருந்தனர். பிகில் படத்துக்கு பிறகு ஷாருக்கான் படம் இயக்குவாரா? ஜூனியர் என்டிஆர் படத்தை இயக்குவாரா என்று முடிவாகாத நிலையில் அட்லியிடம் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார் இயக்குனர் கே.பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனு. அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் மெசேஜில்.'ஹலோ ப்ரோ .. என் பெயர் சாந்தனு. நான் வளர்ந்து வரும் நடிகர்.
உங்களுடன் இணைந்து ஒரு தரமான காதல் படம் பண்ண ஆசைப்படுகிறேன். ப்ளீஸ் பதில் சொல்லுங்க. உங்கள் படமான பிகில் ஹாட் ட்ரிக் வெற்றியை அடைய வாழ்த்துக்கள்.' என பதிவிட்டார். அதற்கு பதில் அளித்த அட்லி, 'செஞ்சிட்டா போச்சு...' என பதில் அளித்திருக்கிறார்.