பிகில், கைதி வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்.. தயாரிப்பாளர்கள்-நடிகர்கள் அதிர்ச்சி..
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி யிருக்கும் படம் பிகில். ஏஜிஎஸ் என்டர்டெயின் மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. தீபாவளியையொட்டி ரசிகர்களுக்கு விருந்தாக நேற்றே இப்படம் திரைக்கு வந்துவிட்டது.
இப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் படம் வெளியான சில மணி நேரத்திலேயே ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர். இதனால் படக்குழு, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து தீபாவளி பண்டிக்கைக்கு விஜய் திரைப்படம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மெர்சல், சர்க்கார், இப்போது பிகில் என அனைத்து படத்தையும் தமிழ்ராக்கர்ஸ் ஆன்லைனில் வெளியிட்டு வருகிறது. அதேபோல் கார்த்தி நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கைதி படமும் தீபாவளிக்கு வெளியானது.
அப்படத்தையும் தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்ட ஷாக் அளித்திருக்கிறது. இத்தனைக்கும் அனுமதி இல்லாமல் சட்டவிரோத இணைய தள சேனல்களில் படத்தை வெளியிடக் கூடாது என்று ஏற்கனவே கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.