விக்ரமை மருதநாயகம் ஆக்குகிறாரா கமல்... மனதை கவர்ந்த நடிகர்களுக்கு மறுபடி மறுபடி வாய்ப்பு..
மருதநாயகம் படத்தை இயக்கி நடிக்கவிருந்தார் கமல்ஹாசன். அதற்கான வேலைகள் 1997-ல் தொடங்கப்பட்டது. பின்னர் பைனான்ஸ் உள்ளிட்ட சில காரணங்களால் படப்பிடிப்பை தொடர முடியாமல் போனது.
இந்நிலையில் மருதநாயகம் படத்தில் நடிக்க மாட்டேன் என் கமல்ஹாசன் தெரிவித்தார். ஆனால் அப்படத்தை நீங்கள் திரையில் பார்ப்பீர்கள் என்றும் கூறினார்.
மருதநாயகம் படத்தில் கமல் நடிக்கவிருந்த அந்த பாத்திரத்தில் நடிக்கபோகும் நடிகர் யாராக இருப்பார் என்ற பேச்சு ஒரு பக்கம் எழுந்துள்ள நிலையில் சியான் விக்ரம் மருதநாயகமாக நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசன் தயாரித்த கடாரம் கொண்டான் படத்தில் ஹீரோவாக விக்ரம் நடித்திருந்தார்.
அப்படத்தின் ஆடியோ வெளியிட்டின்போது விக்ரமை வானாளவ கமல் புகழ்ந்தார். சமீபத்தில் கமலின் மனதை கவர்ந்த நடிகர் விக்ரம். அத்துடன் உடற்கட்டையும் கட்டுமஸ்தாக பராமரித்து வருகிறார். அவரையே மருதநாயகமாக நடிக்க வைக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
கமலின் மனதை ஒரு நடிகர் கவர்வது அவ்வளவு எளிதல்ல. அப்படி கவர்ந்துவிட்டால் அவருக்கு தனது பட நிறுவனத்தில் தொடர்ச்சியாக நடிக்க வாய்ப்பளிப்பார். மாதவன், ரமேஷ் அரவிந்த் , ஜெயராம் போன்றவர்களை அடிக்கடி தனது படத்தில் நடிக்க வைப்பார் கமல். அந்த வரிசையில் விக்ரமும் கமலின் மனதை கவர்ந்த நடிகர் ஆகியிருக்கிறார். மேலும் கமல் இயக்கத்தில் நடிக்க தயார் என்று அவர் அளித்த பேட்டியிலும் தெரிவித்திருக்கிறார்.