பிகில் 2ம் பாகம் ராயப்பன் உருவாகுமா?... அட்லி அசத்தலான பதில்...
தளபதி விஜய் நடிப்பில் கடந்த 25ம் தேதி வெளியான பிகில் திரைப்படம் வரவேற்பு பெற்று வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
மைகேல், ராயப்பன் என இருவேடத்தில் விஜய் நடித்திருக்கிறார். குறிப்பாக ராயப்பன் கேரக்டர் விஜய் ரசிகர்களுக்கு பெரிதும் பிடித்துள்ளது. அந்த கேரக்டரை விஜய் தனது நடிப்பால் மெருகேற்றி உள்ளதாகவும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் ரசிகர் ஒருவர், ”ராயப்பன் கேரக்டரின் இளவயது பருவம் குறித்த ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும்” என்று அட்லியிடம் கேட்டிருக்கிறார். அதாவது பிகில் படக்கதையின் முதல் படமாக இதை உருவாக்க கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்துள்ள அட்லி, செஞ்சிட்டா போச்சு என்று தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஒரு படத்தின் இரண்டாம் பாகம் தான் உருவாக்கப்படும். அதேசமயம் பாகுபலி படத்தில் பாகுபலியை கட்டப்பா ஏன் கொலை செய்தார் என்பதற்காக பாகுபலி இரண்டாம் பாகம் உருவானது. ஆனாலும் இது பாகுபலி படத்தின் ப்ரிக்யல் கதைதான். அதேபோல் பிகில் படத்தின் முந்தைய பாகமாக ராயப்பனின் இளவயது பற்றிய படம் ராயப்பன் என்ற பெயரில் உருவாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.