கார்த்தியின் கைதி தமிழ்நாட்டில் கலக்கல்... முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா...?
கார்த்தி நடித்து தீபாவளியை முன்னிட்டு கடந்த 25ம் தேதி வெளியாகியான படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். டிரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, திருப்பூர் விவேக் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படம் திரைக்கு வந்து ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் வரவேற்பை பெற்று வருகிறது.
'அஞ்சாதே' நரேன், விஜய் டிவி தீனா உள்ளிடோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்துபற்றிய தகவல்படி தமிழ்நாடு முழுவதும் முதல் நாளில் ரூ 3.61 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.