அலுவலக ஊழியருடன் செக்ஸ்.. யு.எஸ். பெண் எம்பி ராஜினாமா..
நாடாளுமன்ற ஊழியருடன் செக்ஸ் வைத்து கொண்டதாக புகார் எழுந்ததால், அமெரிக்க பெண் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
அமெரிக்காவில் மக்கள் தாங்கள் என்ன தவறு செய்தாலும் சரி, தங்களை ஆள்பவர்கள் தவறு செய்யக் கூடாது என்று எண்ணுபவர்கள். குறிப்பாக, அதிபர் முதல் சாதாரண கவுன்சிலர் வரை புகார்களில் சிக்கினால் கடுமையாக விமர்சிப்பார்கள். அதிலும் செக்ஸ் புகார் என்றால் விட மாட்டார்கள்.
தற்போது கலிபோர்னியாவில் ஒரு பெண் எம்.பி. மீது செக்ஸ் புகார் வந்துள்ளது. பிரதிநிதிகள் சபையின் ஜனநாயக கட்சி உறுப்பினரான காட்டீ கில், நாடாளுமன்ற(காங்கிரஸ்) ஊழியருடன் செக்ஸ் வைத்து கொண்டிருப்பதாக புகார்கள் எழுந்தன. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல நன்னடத்தை நெறிமுறைகள் உள்ளது. இந்த விதிகளை மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காட்டீ கில் மீது எழுந்துள்ள செக்ஸ் புகார்கள் குறித்து விசாரணைக்கு நாடாளுமன்ற நெறிமுறைகள் கமிட்டி உத்தரவிட்டது. இது டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சியினருக்கு எதிர்ப்பு பிரசாரம் செய்வதற்கு வசதியாக போய் விட்டது.
இந்நிலையில், காட்டீ கில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று (அக்.27) ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தையும் இணைத்துள்ளார். அதில், நான் கனத்த இதயத்துடன் எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன். இது வரை நான் செய்திராத மிகவும் மனத்துயரத்தை அளிக்கும் காரியம் இது. ஆனால் எனது செயல், தொகுதி மக்களுக்கும், சமுதாயத்திற்கும், இந்த நாட்டிற்கும் நன்மை செய்யும் என்று நம்புகிறேன்.
எதிர்க்கட்சியினர் (குடியரசு கட்சி) மோசமான பிரச்சாரம் செய்வதற்கு வாய்ப்பு அளிக்காமலும், எனக்கு வாக்களித்த நல்ல மனிதர்களின் மனதை நோகடிக்காமலும் இருப்பதற்காக நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இந்த ராஜினாமா விவகாரம், அமெரிக்க நாடாளுமன்ற அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ட்விட்டரில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமென்ட்ஸ் வைரலாகி வருகிறது. அதில் டொனால்டு டிரம்ப் மீது இல்லாத செக்ஸ் குற்றச்சாட்டுகளா? என்றும் பலர் கேட்டிருக்கிறார்கள்.