”பிகில்” விஜய் கலாய்த்த குண்டம்மா யார் தெரியுமா? டிவிட்டரில் அம்பலப்படுத்திய ரோபோ சங்கர்
தளபதி விஜய் நடிக்க அட்லி இயக்கிய பிகில் படத்தில் பெண்கள் கால் பந்தாட்ட அணியில் இந்துஜா, அம்ரிதா, வர்ஷா பொல்லாம்மா, காயத்ரி, இந்திரஜா சங்கர், காயத்ரி என பலர் நடித்திருந்தனர்.
கிளைமாக்ஸ் காட்சியில் போட்டியில் சரியாக ஆடவில்லை என்பதற்காக தனது வீராங்கணைகளை விஜய் திட்டித் தீர்ப்பார், அதில் அந்த குண்டுப்பெண் பாண்டியம்மாவை பார்த்து குண்டம்மா குண்டம்மா என்று சொல்லி வெறுப்பேற்று வார். அதே கடுப்பில் விளையாட வரும் பாண்டியம்மா கிரவுண்டின் வெகு தூரத்திலிருந்து பந்தை எட்டி உதைத்து கோல் போடுவார்.
பாண்டியம்மா வேறு யாருமல்ல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திராஜா சங்கர்தான். சென்னை காசி தியேட்டரில் ரோபோ சங்கர் தனது குடும்பத்துடன் சென்று பிகில் படத்தை பார்த்து ரசித்தார். பின்னர் டிவிட்டர் பக்கத்தில். பிகில் படத்தை காசி தியேட்டரில் பார்தேன். வேற லெவல் ரெஸ்பான்ஸ் இருந்தது. தளபதி ரசிகர்கள் பாண்டியம்மா பெயரை ரொம்பவும் சத்தமாக உச்சரித்தனர்' என குறிப்பிட்டிருக்கிறார்.