விஜய்யின் பிகில் ரூ.100 கோடி வசூல்... அரபு நாட்டில் நெருங்கும் சாதனை...
ராயப்பன், மைக்கேல் என தளபதி விஜய் இருவேடத்தில் நடித்த பிகில் தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்னதாக 25ம் தேதி வெளியானது. எதிர்ப்பார்த்தது போலவே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்த படம் வெளிநாட்டில் வசூல் சாதனை செய்து வருகிறது.
குறிப்பாக அரபு நாட்டில் ரூ 15 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம். கண்டிப்பாக இந்த படம் ரூ 20 கோடி வரை அங்கு வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன் விஜய்யின் சர்கார் அங்கு ரூ 16 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
பிகில் பட வசூல் 3வது நாளில் குறைந்துள்ள தாக உறுதியற்ற தகவல்கள் வந்துக்கொண்டி ருக்கும் நிலையில் இணைய தளவாசிகள் சிலர் பிகில் 100 கோடி வசூல் அடைந்துவிட்டதாக தகவல் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் 100 கோடி வசூல் குறித்து தயாரிப்பு தரப்பிலிருந்து இன்னும் உறுதியான தகவல் எதுவும் வரவில்லை.