ஷாம்லி வரைந்த அரைநிர்வாண ஓவியம்... மாறி மாறி வரும் பாராட்டும், விமர்சனமும்...
தல அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கை ஷாம்லி. இவரும் நடிகைதான். வீரசிவாஜி படத்தில் நடித்த ஷாம்லி கடந்த வருடம் அம்மம்மாகாரில்லு படத்தில் நடித்தார். தொடர்ந்து நடிக்க விரும்பியபோதும் வாய்ப் பில்லாததால் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருக் கிறார்.
இவருக்கு நடிப்பு தவிர ஓவியம் வரையும் திறமையும் உண்டு. பட வாய்ப்பு வருமா வராதா என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் தனக்கு மிகவும் பரிட்சயமான ஓவியம் வரைதலில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் ஷாம்லி வரைந்த சில ஓவியங்கள் பெங்களூரில் உள்ள பெயிண்டிங் கண்காட்சி யில் வைக்கப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றது. வெவ்வேறு வடிவில் இருந்த ஓவியங்களில் குறிப்பாக ஆடை மூடியும் மூடாமலும் வரையப்பட்டிருந்த அரை நிர்வாண ஓவியங்கள் பலரது கவனத்தை ஈர்த்தது. அதில் உள்ள கலை நுணுக்கத்துக்கு பாராட்டு வரும் அதேசமயம் சிலர் விமர்சனமும் செய்து வருகின்றனர்.