பொது இடத்தில் கணவருக்கு உதட்டு முத்தம் தந்த ஸ்ரேயா... நெட்டில் வீடியோ வைரல்..

ரஜினிகாந்த், விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வந்த பட வாய்ப்புகள் குறைந்தவுடன் திருமணம் செய்துகொண்டு செட்டிலாக முடிவு செய்தார் ஸ்ரேயா. ரஷ்யாவை சேர்ந்த கோடீஸ்வர தொழில் அதிபர் மாப்பிள்ளை ஆண்ட்ரேய் கொஸ்சேவ் என்பவரை ரகசியமாக மணந்தார். தனது கணவரை வெளிவுலகுக்கு காட்டாமல் மறைத்து வந்தார் ஸ்ரேயா.

இதுபற்றி ஸ்ரேயாவிடம் கேட்டபோது, 'தனிப்பட்ட எனது வாழ்க்கைபற்றி நான் யாருடனும் பேச விரும்பவில்லை' என்றார். தற்போது நிலைமை மாறியிருக்கிறது. தனது கணவரை பார்ட்டிகளுக்கு அழைத்துச் சென்று மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் அளவுக்கு மனதை விசாலப் படுத்திக்கொண்டிருக்கிறார்.

தீபாவளியையொட்டி மும்பையில் நடந்த பார்ட்டி ஒன்றிற்கு கிக்கான உடை அணிந்து வந்த ஸ்ரேயா தன்னுடன் கணவரையும் அழைத்து வந்தார். இந்த ஜோடியை கண்டதும் புகைப்படக்காரர்கள் சூழ்ந்துகொண்டனர். ஆனால் எந்தவித ஒளிவும் மறைவும் இல்லாமல் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த ஸ்ரேயா, திடீரென்று கணவருக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்து அசத்தினார். இணைய தளத்தில் அவர் முத்தம் காட்சி வீடியோவாக நெட்டில் வைரலானது.

More News >>