மனைவி அனுஷ்காவைக் கொண்டாடும் விராட்- வைரலாகும் காதல் முத்தம்!

விருஷ்கா தம்பதியரின் காதல் முத்தம் புகைப்படம்தான் இன்றைய வைரல் ஹிட் புகைப்படமாக ட்ரெண்ட் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.

இந்தியா மட்டுமல்ல உலகத்தையே தங்கள் காதல் திருமணத்தால் திரும்பி பார்க்க வைத்த ஜோடி, விருஷ்கா தம்பதியினர்.இதுவல்லவோ காதல்’ என ஊரே வியக்கும் வகையில் தாங்கள் சார்ந்த துறையிலும் சரி, தங்களது சொந்த வாழ்க்கையிலும் சரி, யாரும் யாரையும் விட்டுக்கொடுக்காது சாதனை மேல் சாதனை படைத்து ஜொலித்து வருகின்றனர் இந்தத் தம்பதியினர்.

விராட் கோலியின் சாதனையை மனைவி அனுஷ்கா சமூக வலைதளங்களில் கொண்டாடி மகிழ்வதும் அனுஷ்காவின் சாதனையையும் அவரது பெருமையையும் கோலி சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்வதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில், இத்தத் தம்பதியினர் தற்போது வெளியிட்டுள்ள காதல் முத்தம் புகைப்படம் தற்போது டாப் ஹிட் லிஸ்டில் உள்ளது. சமீபத்திய தென்னாப்பிரிக்க போட்டியில் கோலியும், தனது சொந்தத் தயாரிப்பிலும் நடிப்பிலும் விரைவில் வெளிவரவிருக்கும் 'பாரி' திரைப்படத்தில் அனுஷ்காவும் பிஸி.

ஆனால், கிடைக்கும் இடைவேளைகளின் போதெல்லாம் இருவரும் தங்கள் காதலைக் கொண்டாடி வருகின்றனர். இந்த ‘காதல் முத்தம்’ புகைப்படத்தை கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "என்னுடைய ஒரே ஒருத்தி" என மனைவி அனுஷ்கா குறித்துப் பகிர்ந்துள்ளார்.

More News >>