மகளை கிண்டல் செய்தவரை கலாய்த்த குஷ்பு.. உன் மூச்சிய கண்ணாடில பாரு...
By Chandru
நடிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கும் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருக்கிறார். திரைப்பட நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தாலும் அரசியல், படங்கள் தயாரிப்பது, டிவி சீரியலில் நடிப்பது என பிஸியாக இருக்கிறார்.
சுந்தர்,சி, குஷ்பு தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் மகள்களுடன் தீபாவளி கொண்டாடிய குஷ்பு அந்த புகைப்படத்தை நெட்டில் வெளியிட்டார். அதைப் பார்த்த யாரோ ஒருவர் குஷ்புவின் மகள்பற்றி கிண்டல் செய்து மெசேஜ் அனுப்பினார். அதைப்பார்த்ததும் குஷ்பு டென்ஷன் ஆனார். கோபம் உச்சிக்கு ஏறிய நிலையில் அந்த நபரை சகட்டுமேனிக்கு திட்டி மெசேஜ் போட்டார்.
'பன்னி முதல்லே உன் மூஞ்சிய கண்ணாடில பாரு... நாய் கூட பாக்காது... வாந்தி எடுத்துட்டு போயிடும்.. பிளட்டி' என்று குமுறியிருக்கிறார் குஷ்பு.