விஜய் பிகில் ரூ 150 கோடி வசூல் சாதனை.... ரஜினிக்கு பிறகு வசூல் குவித்த ஹீரோ..
தீபாவளி விருந்தாக கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது விஜய் நடித்த பிகில் திரைப்படம். அட்லீ இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.
பிகில் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம்பற்றி பாசிடிவ் விமர்சனங்களும், நெகடிவ் விமர்சனங்களும் வந்தன. முதல் 2 நாட்கள் இருந்த கூட்டம் 3வது நாளில் குறைந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் 3 வது நாளில் இப்படம் 100 கோடி வசூல் சாதனை செய்ததாக தகவல் வெளியானது.
படம் குறித்து நெகட்டிவான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தாலும் விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். முதல் மூன்று நாட்களில் உலகம் முழுக்க 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக நேற்று தகவல் வெளியா நிலையில் 4வது நாளில் இந்தியளவில் அதிக வசூலை குவித்து பிகில் படம் டாப் 5ல் முதல் இடத்தை பிடித்துள்ளது.
உலக அளவில் 4 நாட்களில் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது விஜய்யின் பிகில். ரஜினிகாந்த்துக்கு பிறகு 2வது ஹீரோ ஒருவரின் படம் 4வது நாளில் 150 கோடியை தாண்டி குவித்திருக்கிறது என்றால் அது விஜய்யின் பிகல் படம்தான் என்று கூறப்படுகிறது. இதனை விஜய் ரசிகர்கள் நெட்டில் கொண்டாடி வருகின்றனர்.