தல அஜீத்துக்கு ஜோடி பிரியங்கா சோப்ராவின் தங்கையா? பரிணிதி சோப்ரா வருவாரா..
By Chandru
எச்.வினோத் இயக்கத்தில் தல அஜீத்தின் வலிமை படத்தின் தொடக்க விழா பூஜை நடந்தபிறகு அப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது. நயன்தாரா, நஸ்ரியா, ஜான்வி கபூர் பெயர்கள் அடிபட்டு வருகிறது. ஆனால் யாரும் அஜீத் படத்தில் நடிக்கவில்லை என்ற தகவலும் வந்தது. அதை இருவருமே மறுத்துவிட்டர்கள். தற்போது மேலும் சில தகவல்கள் வந்துள்ளது.
பிரியங்கா சோப்ராவின் தங்கை பரிணிதி சோப்ரா. இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர்தான் வலிமை படத்தில் நடிக்க உள்ளதாக பேச்சு எழுந்தது. அதேபோல தேசிய விருது பெற்ற தோட்டா தரணி இப்படத்திற்கு அரங்கம் அமைக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு தகவல்களையும் கூட பட தயாரிப்பாளர் போனிகபூர் உறுதி செய்யவில்லை.
அஜீத்துக்கு பொருத்தமான அதேசமயம் பிறமொழியிலும் ஏற்கனவே பிரபலமான ஒரு நடிகையை தேர்வு செய்வதற்கே பட தரப்பு முடிவு செய்துள்ளது. அதற்கான ஆலோசனை களையும், பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.