பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி
பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112வது ஜெயந்தி விழா, 57வது குருபூஜை விழா, பசும்பொன்னில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மதுரைக்கு வந்தார். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவ வெண்கலச் சிலைக்கு ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், அவர் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு காரில் சென்றார். அங்கு தேவர் நினைவிடத்தில் ரோஜாப்பூ மாலை வைத்து ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம்தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், பெரிய கருப்பன் உள்ளிட்ட திமுக முக்கியப் பிரமுகர்களும் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.