நித்யா மேனனுக்கு ரகசிய திருமணம் நடந்ததா...? பெண் இயக்குனர் பேச்சால் பரபரப்பு...
கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், கதை பிடித்தால் தான் நடிப்பேன், லிப் டு லிப் முத்தம் தர மாட்டேன் என கண்டிஷனுக்குமேல் கண்டிஷன்போட்டு அதன்பிறகுதான் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறார் நித்யா மேனன்.
கைநிறைய படங்கள் ஒப்புக் கொண்டிருந்த நித்யா மேனன் தற்போதெல்லாம் குறைந்த அளவில் படங்கள் ஒப்புக்கொள்கிறார். அதற்கு காரணம் நித்யா மேனனுக்கு ரகசிய திருமணம் ஆகிவிட்டதுதான் என்ற ஷாக் தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே நடிகர் சுதீப்புடன் நித்யாவுக்கு காதல் இருந்ததாக தகவல்கள் வந்தன. பின்னர் அது பிசுபிசுத்துப்போனது.
சமீபகாலமாக நித்யாவுடன் பழகுவதுடன் அவர் நடிக்கும் ஜெயலலிதா வாழ்க்கை படமான அயர்ன் லேடி படத்தை இயக்கும் இயக்குனர் பிரியதர்ஷினி, நித்யா மேனன்பற்றி குறிப்பிடும் போது திருமதி என்று குறிப்பிடுகிறாராம். திருமணம் ஆனவரைத்தான் திருமதி என குறிப்பிடு வார்கள் அப்படியானால் நித்யாவுக்கு ரகசியமாக திருமணம் ஆகிவிட்டதா என்ற பேச்சு எழுந்துள்ளது.
நித்யா மேனனுக்கும், நான் ஈ வில்லன் நடிகர் சுதீப்புக்கும் காதல் இருந்ததாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் முன்பு கிசுகிசு வெளிவந்தது. அந்த கிசுகிசு பின்னர் ஓய்ந்து போனது. தற்போது புதிய சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறது பிரியதர்ஷினியின் திருமதி மரியாதை வார்த்தை.