அதிபரை கொலை செய்யும் திட்டம் திருடியnbspவட கொரிய ஹேக்கர்கள்

வட கொரியத் அதிபர் கிம் ஜாங் உன் அவர்களை கொலை செய்ய வைத்திருந்த திட்டம் உள்ளிட்ட பல ராணுவ ஆவணங்களை, வட கொரியாவை சேர்ந்த ஹேக்கர்கள், தென் கொரியாவின் இணையத்தை ஊடுருவி திருடி உள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஹேக்கர்களால் திருடப்பட்ட அனைத்து ஆவணங்களும், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவால் வடிவமைக்கப்பட்ட போர்க் கால அவசரத் திட்டங்கள் என்று கூறப்படுகிறது. அதில்,தங்களது நட்பு நாடுகளின் மூத்த தளபதிகளுக்கு வழங்கப்பட்ட அறிக்கைகளும் இருந்தன.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே இந்த இணைய ஊடுருவல் நடந்திருக்கிறது. இந்தத் தகவல் குறித்து தமது கருத்தினை தெரிவிக்க தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் மறுத்து வருகிறது.

மேலும், அந்த ஆவணங்களில் தென் கொரியாவின் சிறப்பு படைகளின் திட்டங்கள் குறித்த கோப்புகள், தென் கொரியாவில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ராணுவ மையங்கள் குறித்த தகவல்களையும் திருடப்பட்டதாக தெரிகிறது. ஆனால், வட கொரியா இதனை மறுத்துள்ளது.

More News >>