தயாரிப்பாளருடன் மோதும் பாகுபலி ராணா...சம்பள பாக்கியை தராமல் படத்தை ரிலீஸ் செய்ய முயன்றால் வழக்கு
பிரபாஸுக்கு வில்லனாக பாகுலி படத்தில் நடித்த கட்டுமஸ்த்தான வில்லன் ராணா சில படங்களில் ஹீரோவாக நடிக்கிறார். இதற்கிடையில் அவர் உடல்நலன் பாதிக்கப்பட்டு வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார்.
புதிய படத்தில் நடிப்பதுபற்றி இயக்குனர்களிடம் கதை கேட்டுவருகிறார். இந்நிலையில் தமிழில் மடைதிறந்து) தெலுங்கில் 1945 பெயரில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் ராணா.
சமீபத்தில் இப்படத்தில் ராணா நடித்திருக்கும் ஸ்டண்ட் காட்சியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது அதைக்கண்டு ராணா அதிர்ச்சி அடைந்தார். தனது டுவிட்டர் பக்கத்தில்,'இப்படம் இன்னும் முடிவடையவில்லை. எனக்கு இன்னும் அப்பட தயாரிப்பாளர் சம்பள பாக்கி தரவேண்டி இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக அப்படக்குழு வினரை நான் சந்திக்கவில்லை. தற்போது பர்ஸ்ட் லுக் வெளியிட்டிருப்பது யாரிடமாவது ஏமாற்றி பணம் பெறலாம் என்ற நோக்கத்தில்தான். இதை யாரும் ஊக்குவிக்காதீர்கள்' என குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள பட தயாரிப்பாளர் ராஜராஜன்,'ஒரு படம் முடிந்துவிட்டதா, இல்லையா? என்பதை இயக்குனர்தான் முடிவு செய்ய வேண்டும். இப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் அதனை முடிவு செய்வார்கள். 60 நாள் படப்பிடிப்பு நடந்துள்ளது, கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. முடிவடையாத படத்தை யாரும் வெளியிட மாட்டார்கள் இப்படத்தின் இயக்குனர் சத்யசிவா படத்தை முடித்திருக்கிறார்' என்றார்.
ராணா, தயாரிப்பாளருக்கு இடையான இந்த மோதல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, 'எனக்கு சம்பள பாக்கி தராமல் படத்தை வெளியிட முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்' என குறிப்பிட்டிருக்கிறார் ராணா.