கூட்ட நெரிசலில் நடிகையின் மூக்கை உடைத்த ரசிகர்கள்... வலி தாங்க முடியாமல் தவிப்பு..
ஒரு அடார் லவ் படத்தில் கண்ணடித்து நடித்து பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். அதே படத்தில் மற்றொரு ஹீரோயினாக நடித்தவர் நூரின் ஷெரிப். கேரளாவில் நடந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். முன்னதாக அவருக்காக ரசிகர்கள்.
மணிக்கணக்கில் காத்திருந்தனர். இந்நிலையில் நூரின் வந்தவுடன் அவரது காரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இதனால் நெரிசல் ஏற்பட்டு தள்ளு முள்ளு நடந்தது. இதில் யாரோ ஒருவரது கை நூரின் மூக்கு மீது மோதியதில். வலி தாங்க முடியாமல் துடித்தார். லேசாக ரத்தமும் வந்தது. அவரது கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. தர்மசங்கடத்தில் ஆழ்ந்த நூரின் வலியை பொறுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
சம்பவம் பற்றி நூரின் கூறும்போது,'என்னை இந்த நேரத்துக்குத்தான் வரச் சொல்லியிருந்தார்கள். சரியான நேரத்துக்குத்தான் நான் வந்தேன். ரசிகர்கள் பதற்றம் அடையாமல் அமைதியாக இருங்கள்' என்ற கேட்டுக்கொண்டார் .
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன் ஷெரின் மூக்கை பிடித்துக்கொண்டு வலியால் துடிக்கும் காட்சி வீடியோவாக வெளியாகி இருக்கிறது.