”கைதி” படத்தை பார்த்த தளபதி 64 டீம்.. வேற லெவலில் இருக்கு...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளியையொட்டி திரைக்கு வந்த 'கைதி' வரவேற்பை பெற்றது. நாளுக்கு நாள் வசூலும், திரையரங்கு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
தந்தை மகளுக்கு இடையேயான பாசத்துடன் அதிரடி ஆக்ஷன் காட்சிகளையும் இணைந்து பரபரக்க வைத்திருந்தார் இயக்குனர் லோகேஷ். இவர் அடுத்து விஜய்யின் தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார். இப்படக் குழுவினர் கைதி படத்தை லோகேஷ் கனகராஜுடன் இசையமைப்பாளர் அனிருத், சாந்தனு ஆகியோர் தியேட்டரில் பார்த்தனர். பிகில் படத்தில் நடித்த கதிரும் உடனிருந்து படம் பார்த்தார். அனைவரும் கைதியின் மிரட்டல் காட்சிகளை கண்டு அசந்துபோய் லோகேஷுக்கு வாழ்த்து மேல் வாழ்த்து பகிர்ந்தனர்.
கைதி வேற லெவலில் இருக்கிறது. லோகேஷ் இயக்கும் தளபதி 64 அதையும் தாண்டி பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என கருத்து தெரிவித்திருக்கின்றனர்.