12 ஆயிரம் பேர் வேலை பறிப்பு? காக்னிசென்ட் அறிவிப்பு

காக்னிசென்ட் டெக்னாலஜிஸ் சொல்யூஷன்ஸ் என்ற பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனம்(ஐ.டி.கம்பெனி) வெளியிட்டுள்ள மூன்றாம் காலாண்டு நிதி அறிக்கையில் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்களோடு ஆட்குறைப்பு அறிவிப்பும் வெளியாகி ஊழியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நிறுவன வளர்ச்சி:

மூன்றாம் காலாண்டு முடிவில் நிறுவனம் 5.1 சதவீதம் வளர்ச்சி பெற்று நிறுவனத்தின் மதிப்பு 4.25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

உலகப்பொருளாதரம் மந்தமாக இருந்த போதிலும் காக்னிசென்ட் நிறுவனத்தின் வளர்ச்சி அந்நிறுவன ஊழியர்களின் உழைப்பால் எட்டப்பட்டுள்ளது.

துறைசார்ந்த வளர்ச்சி :

வங்கித் துறை மற்றும் வாழ்வியல் துறை நல்ல வளர்ச்சி விகிதத்தை அடைந்த போதிலும் சுகாதாரத் துறை சார்ந்த(Healthcare Business )தொழில்கள் .9 சதவிகித பின்னடைவை சந்தித்துள்ளது.இதனால் மொத்த வளர்ச்சி விகிதம் காக்னிசென்ட் நிறுவனத்தின் போட்டியாளர்களான டி.சி.எஸ் மற்றும் இன்போசிஸை விட குறைவுதான்.குறிப்பாக அமெரிக்காவில் காக்னிசென்ட்டின் முக்கிய தொழில்கள்(Business ) கைநழுவியதுதான் காரணமாக சொல்லப்படுகிறது.

சம்பள உயர்வு மற்றும் ஆளெடுப்பு :

என்னதான் வளர்ச்சி விகிதம் உயர்ந்தாலும் தனது போட்டியாளர்களை விட மிக குறைவாகஇருப்பதால் வரும் நிதியாண்டில் அணைத்து ஊழியர்களுக்குமான சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு முற்றிலும் நிறுத்தி வைக்கப்படவுள்ளது.இதோடு மட்டுமல்லாது புதிய ஆட்களை தேர்வு செய்யும் பணியும் நிறுத்தி வைக்கப்படவுள்ளது. மறைமுகமாக மனிதவளத்துறை(H.R ) ஊழியர்களுக்கும் வேலையில்லாமல் போகப் போகிறது.

நீக்கப்படப்போகும் ஊழியர்கள்:

நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு பத்தாயிரம் முதல் பன்னிரெண்டாயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர்.குறிப்பாக, மேலாளர் மற்றும் அதை விட உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் தான் இதில் அதிகமாக உள்ளார்கள். இந்த எண்ணிக்கை அதிகமாகத்தான் வாய்ப்புள்ளதே தவிர குறைவதற்கான வாய்ப்பு மிக குறைவு. நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் இது 2 சதவிகிதம் என்பது வருந்தத்தக்கது. பதவி நீக்க நடவடிக்கைகள் வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து அமலுக்கு வருகிறது.

சுளுக்கெடுப்பு:

மீதமுள்ள 98 சதவிகித ஊழியர்களின் தகுதி மற்றும் வேலை செய்யும் திறனை அதிகரிப்பதற்கும், மாற்று பணியிடங்களில் அமர்த்துவதற்கும் பிரத்தியேக முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வேலைப்பளு அதிகமாக்கப்படுவதுடன் தேர்வுகள் நடத்தும் திட்டங்களும் பரிசீலனையில் உள்ளது.

பாதிப்புகள்:

நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்படுவது ஊழியர்களை சார்ந்தித்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள்தான்.குழந்தைகளின் கல்லூரி மற்றும் பள்ளி படிப்புகள் கூட பாதிப்புக்குள்ளாகலாம். மனஅழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகம். கடந்த சில வருடங்களாகவே ஐ.டி ஊழியர்கள் வாழ்வில் புத்தாண்டு கொண்டாட்டம் கலையிழந்தே காணப்படுகிறது.

ஐ.டி நிறுவனங்களில் புதிய தலைமை பொறுப்பேற்கும் பொழுதெல்லாம் எடுக்கப்படும் இம்மாதிரியான தடாலடி முடிவுகள் நாட்டில் ஆட்சி மாற்றத்தால் கட்சிகள் எடுக்கும் முடிவுகளை போல் உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்தப் பிரச்னையை கவனத்தில் கொண்டால்  ஐ.டி ஊழியர்களுக்கு விடிவுகாலம் வரலாம்.

More News >>